மகனை கடித்த நல்லபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு

வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (14:11 IST)
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மகனை கடித்த பாம்புடன் தொழிலாளி ஒருவர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழைய கன்னிவாடி அடுத்துள்ள கே.குரும்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர்  செல்வம். இவர் அப்பகுதியில் கட்டிட தொழியாளியாக பணியாற்றி வருகிறார்.

இவரது மகன் தர்மராஜ் ( 8 வயது). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர், நேற்ரு பள்ளிக்குக் கிளம்புகையில், வீட்டிற்கு புகுந்த பாம்பு  நல்லமாபு அவரை கடித்துவிட்டது.

இதனால் வலியில் துடித்து கதறிய அவரது சத்தம் கேட்டு வந்த செல்வம் பாம்பை அடித்துவிட்டார். பின்னர், மகனை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது, மகனைக் கடித்த நல்லபபாம்பை கொண்டுவந்துள்ளாதக் கூறி பையைத் திறந்துகாட்டினார்.  4 அடி நீளம் கொண்ட அந்த நல்ல பாம்பை பார்த்த ஊழியர்கள் முதற்கொண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்