செஸ் உலகக் கோப்பை : முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!
வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (16:51 IST)
செஸ் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாம் சுற்று முடிந்து இன்று டை-பிரேக் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.
10வது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் தற்போது நடந்து வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது.
இப்போடியில் உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சமபலத்தில் பிரக்ஞானந்தா போராடினார். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.
எனவே டைபிரேக்கர் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், டை-பிரேக் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். முதல் ரேபிட் சுற்றில் தோற்றதால், அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.