5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டரால் அழித்த விவசாயி.. திருவண்ணாமலையில் ஒரு சோக சம்பவம்..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (10:38 IST)
திருவண்ணாமலையைச் சேர்ந்த கரும்பு விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான  இடத்தில் கரும்பு பயிரிட்டு இருந்த நிலையில் அந்த கரும்பை டிராக்டரை வைத்து அழித்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணி என்பவர் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். கரும்பு வெட்டும் இயந்திரம் மூலம்  செஞ்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை  அதிகாரிகளிடம் கரும்பை வெட்டி எடுத்து செல்லும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் கரும்பு ஆலை அதிகாரிகள் கரும்பு வெட்டும் இயந்திரம் பழுதாகி உள்ளதாகவும் எனவே கூலி ஆட்களை வைத்து கரும்பை வெட்டி ஆலைக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர்

இந்த நிலையில் அவர் 13 டன் கரும்பை ஆள் வைத்து வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய நிலையில் அவருக்கு 39 ஆயிரம் மட்டுமே ஆலை நிர்வாகிகள் கொடுத்தனர். ஆனால் அவர் கரும்பு வெட்டுவதற்கு கூலி மட்டும் 48 ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்துள்ளார்

இதனை அடுத்து மீதம் உள்ள கரும்பையும் கூலி ஆட்கள் வைத்து வெட்டினால் தனக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் கரும்பு பயிரை டிராக்டரை வைத்து அழித்து உள்ளார். இனிமேலாவது எங்களது வேதனைகளை புரிந்து கொண்டு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டும் இயந்திரத்தை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்