குடிக்க பணம் தராததால் தந்தை மற்றும் அக்காவை கொலை செய்த இளைஞர்

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (16:00 IST)
செலவுக்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த இளைஞர் குடிபோதையில் தந்தை மற்றும் அக்காளின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கோவில்மாதிமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருக்கு ஒரு சிவனேசன் என்ற மகனும் கல்யாணி என்ற மகளும் உள்ளனர். இளைய மகனான சிவநேசன் வேலைக்கு போகாமல், குடித்து விட்டு அக்காளுடனும், தந்தையுடனும் சண்டையிட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் சிவநேசன் குடிப்பதற்கு பணம் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். அவரது தந்தை பணம் தர மறுக்கவே அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தட்டிகேட்க வந்த அவரது அக்காள் கல்யாணியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவனேசன் அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமச்சந்திரன் மற்றும் கல்யாணி ஆகியோர் தலையில் போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பினார். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவநேசனை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்