ஆ.ராசா மீது போலீசார் வழக்குப்பதிவு: கைது செய்யப்படுவாரா?

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (09:14 IST)
முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சரும் திமுக பிரமுகருமான ஆ.ராஜா மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூரில் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராஜா கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் துரை பெரியசாமி காவல்நிலையத்தில் புகார் அளித்து ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஆ.ராசா கைது செய்யப்படுவது குறித்து இதுவரை போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்