நாளைப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி– மழைக்கு வாய்ப்பு உண்டா?

சனி, 8 டிசம்பர் 2018 (09:00 IST)
நாளை வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழைத் தொடங்கி தமிழகத்தில் பரவலாக மழைப் பெய்துகொண்டிருக்கிறது. அதையடுத்து தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் ‘தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கத்தால் அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. அது மேலும் வலுப்பெறவும் வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. மேலும் மாலத் தீவு, லட்சத்தீவு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை யும் நீடித்து வருகிறது. இவற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப் பில்லை.’ எனவும் தெரிவித்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்