சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (09:25 IST)
சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
செம்மஒ ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை முன்பு செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில் இந்த போராட்டத்தை அடுத்து அனுமதி இன்றி கூட்டம் கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் 487 செவிலியர்கள்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்