கார் வாங்குரன்னு என்ன மாதிரி யாரும் ஏமாந்துடாதீங்க ப்ளீஸ் - கதறும் நகைக்கடை அதிபர்

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (09:25 IST)
செகனேண்டில் கார் வாங்க முற்பட்ட நகைக்கடை அதிபரை ஒரு கொள்ளை கும்பல் நூதனமாக மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாட்டம் திருப்பத்தூரை சேர்ந்த நகைக்கடை அதிபரான நவாஸ் அகமது என்பவர் செகனேண்டில் கார் வாங்க நினைத்தார். அவர் OLX இணையதளத்தில் சென்று பார்த்த போது, அதில் சென்னை திருவள்ளிக்கேணியை சேர்ந்த சையத் கபீர் என்ற நபர் தனது புதிய இனோவா காரை 14 லட்சத்திற்கு விற்பதாக தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்து நவாஸ் அந்த நபரை தொடர்பு கொண்டு பேசினார். பின் தொலைபேசியில் பேசி முடித்த பின்பு, கார் வாங்க அட்வான்ஸாக வங்கி மூலம் 30 ரூபாயை அனுப்பியுள்ளார் நவாஸ்.
 
இதனையடுத்து காரை நேரில் பார்க்க சையத்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் சந்தித்தார் நவாஸ். அப்போது நவாஸிடன் காரை காட்டிய சையத் ஒன்றரை லட்சத்தை பெற்றுள்ளார். பின் சையத் நவாஸிடம் இங்கேயே இருங்கள், என் உறவினருக்கு உடம்பு சரியில்லை அவரைப் போய் பார்த்துவிட்டு, காரில் உள்ள சிறிய பழுதை சரிபார்த்து விட்டு வருகிறேன் எனக் கூறிச் சென்றுள்ளார்.
 
வெகுநேரம் ஆகியும் சையத் வராததால், அவருக்கு நவாஸ் போன் செய்துள்ளார். ஆனால் போன் ஸ்விட்ச் ஆப். இதனால் அதிர்ச்சியடைந்த நவாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். தன்னைபோல் யாரும் ஏமாற வேண்டாம் என நவாஸ் கண்ணீர்மல்க கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்