இஸ்லாமியர் இடத்தில் புத்தர் சிலை: பாஜக சொந்தம் கொண்டாடியதால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (09:34 IST)
இஸ்லாமியர்களுக்கு சொந்தமான ஒரு இடத்தில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்த இடத்தை சொந்தம் கொண்டாடி பாஜகவினர் திடீரென போராட்டம் நடத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பகுதியில் இஸ்லாமியருக்கு சொந்தமான 5 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்த போது அதில் மூன்று அடி உயரம் கொண்ட புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த அந்த பகுதி பாஜகவினர் உடனே அந்த இடம் புத்தருக்கு சொந்தமானது என்றும் எனவே அந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்து தாங்கள் பூஜை நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் புத்தர் சிலையை தங்களுடைய வாகனத்தில் பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். ஆனால் அந்த வாகனத்தை மறித்து போராட்டம் செய்ததால் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர்களை போலீசார் கைது செய்தனர் 
 
அயோத்தி பிரச்சனை கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முடிவடைந்த நிலையில் தற்போது திடீரென இஸ்லாமியருக்கு சொந்தமான ஒரு இடத்த்ஹில் புத்தர் சிலை கிடைத்ததை காரணம் காட்டி பாஜகவினர் சொந்தம் கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்