பீடி, சிகரெட் விற்ற 94 பேர், பிகைபிடித்த 5 பேர் கைது

Webdunia
வியாழன், 16 ஜூன் 2016 (10:07 IST)
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்ற 94 பேரையும் புகைப்பிடித்த 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ஐகோர்ட் தடைவிதித்தது. தடை மீறி விற்பனை செய்யும் பகுதிகளில் சோதனை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டது.
 
இதைதொடர்ந்து, கோவை மாநகரில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், பீடி, சிகரெட், புகையிலை விற்ற 94 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
 
பொது இடத்தில் சிகரெட் பிடித்ததாக, ஐந்து பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. நேற்றும் இரண்டாவது நாளாக போலீசார் நேற்றும் மாநகர் பகுதி முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்