நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வு தொடங்கியுள்ளது. 7842 மையங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்வை வெளிநாடுகளிலும் சில மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதால் 26 தேர்வு மையங்கள் வெளிநாட்டிலும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் 40 நாட்களும், 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் இரண்டு மாதங்கள் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் மார்ச் 18ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும், ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 42 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
பத்தாம் வகுப்பில் 84 பாடப்பிரிவுகளிலும், 12ஆம் வகுப்பில் 120 பாடப்பிரிவுகளிலும் தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக 86 நாட்களுக்கு முன்னதாக பொது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.