தெற்கு ரயில்வேயின் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் 80% அதிகமான இடங்களை வட மா நிலங்களைச் சேர்ந்தோர் கைப்பற்றியுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னக ரயில்வேயின் 964 பணியிடங்களை நிரப்புவதற்கான நடத்தப்பட்ட போட்டி தேர்வு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்பட்டது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வு வரை நடந்த தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்த பின், 964 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளது.
இதில், தமிழ் நாட்டில் இருந்து 200 பேர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே அரசுத்துறை பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இடை நிலை, கடை நிலை பணிகள் அனைத்தும் உள்ளூர் மக்களைக் கொண்டு 100% நிரப்ப வேண்டும் எனவும், மத்திய அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அதிகாரியகள் பணியிடங்களில் 50% மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.