சமீப நாட்களாக நடிகர் விஜயகாந்த் உடல் நடல்க்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அரசியல் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் பங்கெடுத்து வருகிறார். கட்சியை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு நீரிழிவு பிரச்சனையால் கால் விரலில் இரத்த ஓட்டம் இல்லாததால் அகற்றப்பட்டது. இந்த தகவல் தேமுதிக கட்சி சார்பாக வெளியானது. இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று அவரின் மகன் விஜய் பிரபாகர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு விஜயகாந்த் கேக் ஊட்டிவிட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தில் விஜயகாந்த் மிகவும் ஒல்லியாகி, ஆள் அடையாளமே தெரியாத வகையில் மாறியுள்ளார்.