ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் மாயம்

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:07 IST)
ஓமனிலிருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் திடீரென மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
 
ஓமனில் உள்ள மசீரா தீவில் இருந்து மீன்பிடிக்க 8 மீனவர்கள் 14ம் தேதி சென்றனர். இந்த 8 பேர்களில் ராமநாதபுரம் நம்புதாளையை சேர்ந்தவரகள் 5 பேர்கள், குளச்சல் பகுதியை சேர்ந்தவர்கள் 3 பேர்கள் என்றும் தெரிய வந்துள்ளது
 
 
இந்த நிலையில் மீன் பிடிக்க சென்ற 8 பேர்களும் திடீரென மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
 
 
காணாமல் போன 8 மீனவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது அலை அடித்து சென்றதா? என்பது குறித்து மீட்புப்படையினர்களின் தேடுதல் வேட்டைக்கு பின்னரே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்