அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை - ஆரணி ஓட்டல் சர்ச்சை!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (14:31 IST)
ஆரணியில் 7 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி. 
 
ஆரணியில் 7 ஸ்டார் ஓட்டலில்  தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 10 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை ஓட்டல் உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் ஆரணி ஹோட்டலில் சிக்கன் சாப்பிட்டதால் உடல்நலம் பாதிப்பு என மேலும் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பெறும் நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்