7000 வண்டிகளில் காய்கறி வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதி!

செவ்வாய், 25 மே 2021 (13:28 IST)
7000 வண்டிகளில் காய்கறி வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதி!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் சிறு சிறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி வியாபாரம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு ரேஷன் கடைகளை திறக்க அனுமதித்தது 
 
இந்த நிலையில் தற்போது 5000 தள்ளு வண்டிகள் மற்றும் 2000 குட்டி யானைகள் என 7000 வண்டிகளில் காய்கறி வியாபாரம் செய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளது. இன்று தள்ளுவண்டி காய்கரி வியாபாரத்தை தொடங்கி வைத்து அமைச்சர் சேகர்பாபு கூறியபோது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இருக்க கூடாது என்ற எண்ணத்தின் காரணமாக தற்போது காய்கறி வியாபாரம் அனுமதிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் மட்டும் 5,000 தள்ளுவண்டிகளில் காய்கறி வியாபாரம் செய்யவும் 2000 குட்டியானை வண்டிகளில் காய்கறி வியாபாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி வியாபாரம் செய்ய யாராவது முன்வந்தால் அவருகளுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு அதிக விலைக்கு காய்கறிகள் விற்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்