சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு காய்கறிகளையும் மளிகை பொருட்களையும் வாங்கி குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
அதன்படி இன்று காலை 7 மணி முதலே சென்னையில் பல இடங்களில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு காய்கறி பழங்கள் விற்பனை தொடங்கி விட்டதாகவும் சென்னையைப் போலவே தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நடமாடும் காய்கறி கடைகளில் விலையும் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்