4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை

செவ்வாய், 25 மே 2021 (11:33 IST)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டது. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பழங்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு மூன்று சக்கர வாகனங்கள், தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை விற்க அனுமதித்துள்ளது. 
 
அந்த வகையில் நேற்று ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதோடு, சென்னையில் வாகனங்கள் மூகம் நேற்று 1,400 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை ஆகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்