அமைச்சர் முன் 7 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: மதுரையில் பரபரப்பு

Webdunia
சனி, 14 ஏப்ரல் 2018 (10:01 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் ஓரிரண்டு தீக்குளிப்பு சம்பவங்களும் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய  செய்துள்ளது.
 
இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயகுமார் முன்பாக சற்றுமுன்னர் 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயற்சி செய்த பெண்களின் அருகில் இருந்தவர்களும் காவல்துறை அதிகாரிகளும் தடுத்து அவர்களுக்கு சமாதானம் கூறினர். அப்போது மேலும் 3 பெண்கள் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
 
தங்களது பிள்ளைகள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும், அதனால் மனம் வெதும்பி தீக்க்குளிக்க முடிவு செய்ததாகவும், அந்த 7  பெண்களும் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். 7 பெண்களின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள்னா.ர்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்