ஜோதிகாவுக்கு கணவராக நடிக்கும் 'மைனா' நடிகர்

சனி, 14 ஏப்ரல் 2018 (09:05 IST)
திருமணத்திற்கு பின்னர் ஜோதிகா நடித்த '36 வயதினிலே', மகளிர் மட்டும் மற்றும் நாச்சியார் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த மூன்று படங்களிலும் ஜோதிகாவின் கணவர்களாக  ரகுமான், மாதவன் மற்றும் டாக்டர் குருஷங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.
 
இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கவுள்ள 'துமாரி சுளு' என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க ஜோதிகா ஒப்பந்தமானார். இந்த படத்தில் அவர் வித்யாபாலன் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் அவரது கணவர் கேரக்டரில் நடிப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிக்க வித்யார்த் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் 'மைனா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்செயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கப்படவுள்ளதாகவும், இந்த படத்தில் லட்சுமிமஞ்சு உள்பட இன்னும் சில பிரபலங்கள் இணையவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்