6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கன்… திமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு விருந்து !

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (19:12 IST)
அடுத்தாண்டு  நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை அடுத்து, இதற்காக ஆளுங்கட்சியாக திமுக  ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில், திமுக சார்பில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் மாவட்டங்களை  மண்டலங்களாக பிரிந்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. அதன்படி, டெல்டா மண்டலத்திற்குட்பட்ட  மாவட்ட வாக்குச்சாவடி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது.

திமுக பயிற்சி பாசறை  கூட்டத்தில் பங்கேற்கும் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு மட்டன் பிரியாணி தயாராகி வருகிறது. இதற்காக   6 ஆயிரம் கிலோ மட்டன், 4 ஆயிரம் கிலோ சிக்கன், 40 ஆயிரம் முட்டைகள், 3 ஆயிரம் கிலோ வெங்காயம், 600 கிலோ வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்