நேற்று 24 கோடி, இன்று 57 கோடி: உண்மையில் சிக்கிய பணம் எவ்வளவு?

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (08:01 IST)
பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் சுமார் 30 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு சில முக்கிய ஃபைல்கள் ஏஜிஎஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் பின்னர் ரூபாய் 24 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாகவும் நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது
 
இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தில் விடிய விடிய சோதனை நடந்ததாகவும் இதுவரை 54 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார். இதனால் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் எவ்வளவு பணம் கைப்பற்றப்படும், வேறு என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்படும் என்பது குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினால் மட்டுமே இந்த செய்தி உறுதி செய்யப்படும் என்று என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் விஜய்யின் சாலிகிராமம் வீடு, நீலாங்கரை வீடு மற்றும் பண்ணை வீடுகளில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்டது என்னென்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்