வேங்கை வயல் போலவே மதுரையிலும் 5 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.. தாசில்தார் பேச்சுவார்த்தை..

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (15:27 IST)
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேங்கை வயல் உள்பட இரண்டு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் ஐந்து கிராம மக்கள் திடீரென தேர்தலை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மதுரை அருகே 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்ததால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மதுரை மாவட்டத்தில் உள்ள கே.சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி, பேய்குளம் ஆகிய கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். கேரளாவை சேர்ந்த தனியார் கெமிக்கல் நிறுவனம் இறைச்சி கழிவுகளை சுத்திகரிப்பதால் பாதிப்பு எனவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் தேர்தலை புறக்கணிப்பதாக 5 கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கவில்லை என்றால் ஓட்டு போட மாட்டோம் என அறிவித்த மக்களிடம் மதுரை எஸ்.பி., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்