அடுத்த ஒரு வாரத்திற்கு காத்திருக்குது செம மழை! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth K

ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (16:27 IST)

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஒரு வாரக்காலம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று, கோயம்புத்தூர், திருநெல்வேலி (மலைப்பகுதிகள்), நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சில  பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

 

அக்டோபர் 13: கோயம்புத்தூர், திருப்பூர் (மலைப்பகுதிகள்), நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல்

அக்டோபர் 14: கோயம்புத்தூர் (மலைப்பகுதி), நீலகிரி, தேனி, தென்காசி

அக்டோபர் 15: திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால்

அக்டோபர் 16: கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல்

 

அக்டோபர் 17: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால்

 

அக்டோபர் 18: மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், தேனி, திண்டுக்கல், காரைக்கால்

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்