3,274 அரசு ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள்! - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!

Prasanth Karthick

வியாழன், 20 மார்ச் 2025 (09:08 IST)

தமிழக போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் சிற்றூர் தொடங்கி நகரங்கள் வரை பல்வேறு வழித்தடங்களில் செயல்பட்டு வருகிறது.  இந்த பேருந்துகளில் ஓட்டுநராக, நடத்துநராக பலர் பணிபுரிந்து வரும் நிலையில், புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

 

அதன்படி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதுதவிர தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் மொத்தமாக காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை முதல் http://www.arasubus.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்