பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையிலிருந்து 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 14ம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அடுத்தடுத்து வார இறுதி வரை தொடர் விடுமுறை உள்ளதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் பொங்கல் சிறப்பு பேருந்துகள், ரயில்களுக்கான முன்பதிவுகள் முன்னதாகவே தொடங்கி முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து ஜனவரி 10 முதல் 13ம் தேதி வரை 14,104 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இயங்கும் 8,368 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும். பொங்கல் முடிந்து திரும்ப சென்னை வர வசதியாக 15,800 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K