தீபாவளி முடிந்து மக்கள் பலரும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை பயணித்த நிலையில் நேற்று ஒருநாளில் 79 ஆயிரம் பயணிகள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து 4 நாட்களும் விடுமுறையாக இருந்ததால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி முதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பலரும் சென்னை திரும்ப தொடங்கிய நிலையில், சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதுபோல வேறு நகரங்களில் இருந்தும் வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் 3,912 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
நேற்று இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் மட்டும் 79,626 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். போக்குவரத்து கழகத்தில் ஒரே நாளில் முன்பதிவு செய்து பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்ச உச்சம் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Edit by Prasanth.K