மாநிலம் முழுவதும் 256 நடமாடும் மருத்துவமனை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (16:58 IST)
மாநிலம் முழுவதும் 256 நடமாடும் மருத்துவமனை: முதல்வர் தொடங்கி வைத்தார்!
தமிழகம் முழுவதும் 256 நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் 
 
இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை என்ற திட்டத்தின் கீழ் 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது 
 
தொலைதூர கிராமங்களுக்கான மருத்துவத்தை வலுப்படுத்த நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 133 மருத்துவ வாகனங்கள் சேவை தொடங்கி வைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இன்று 256 நடமாடும் மருத்துவமனை வாகனங்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் ஆகியோர் மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு சென்று சேவையாற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்