முள்ளும் மலரும் படத்தில் நானும் ரஜினியும் இணைந்து நடிக்க வேண்டியது… பல வருடங்கள் கழித்து கமல் பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 22 மே 2025 (07:48 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக முன்னணிக் கதாநாயக நடிகராக தன்னை தக்கவைத்துக் கொண்டு வருபவர் கமல்ஹாசன். அவரின் சக போட்டியாளராக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார். இருவரும் போட்டியாளராக இருந்தாலும் திரைக்கு வெளியே மிகச்சிறந்த நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.

இதைப் பல சந்தர்ப்பங்களில் இருவருமே வெளிப்படுத்தி வருகின்றனர். தொடக்கத்தில் சேர்ந்து பல படங்களில் நடித்த இருவரும் ஒரு கட்டத்தில் இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தனர். அதனால் தில்லு முல்லு படத்துக்குப் பிறகு இப்போது வரை அவர்கள் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் ஒரு சுவாரஸ்யமானத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “ரஜினி நடித்ததிலேயே எனக்குப் பிடித்தது முள்ளும் மலரும் படம்தான். அந்த படம் உருவாவனதே என் வீட்டில்தான். இயக்குனர் மகேந்திரனையும், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவையும் என் வீட்டில்தான் சந்திக்க வைத்தோம். அந்த கதை உருவான போது அதில் நானும் நடிப்பதாக இருந்தது. அது எந்தக் கதாபாத்திரம் என்று தெரியவில்லை. கதை உருவாகும் போது எந்தக் கதாபாத்திரம் என்று யாரும் கேட்கமாட்டோம். ஆனால் பின்னர் அது நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்