இந்த பயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி, பயணத்தை தடை செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால், டிஜிபி அலுவலகம் இதனை மறுத்துள்ளது.
பொதுவாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் எந்த பகுதியில் நடைபெறுகிறதோ, அந்த பகுதி காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில்தான் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இது ஒரு வழக்கமான நடைமுறை.
அதேபோல், டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமல், அன்புமணியின் நடைபயணத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது. "அன்புமணி ராமதாஸின் நடைபயணத்துக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை" என்று டிஜிபி அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.