எந்தெந்த மாவட்டங்களுக்கு பேருந்து அனுமதி தெரியுமா?

வெள்ளி, 25 ஜூன் 2021 (20:44 IST)
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 23 மாவட்டங்களில் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த புதிய ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார் அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம். அதன் ஒரு கட்டமாக தொற்று குறைவாக உள்ள 23 மாவட்டங்களுக்கு பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில் வகை 2-ல் உள்ள  23 மாவட்டங்களான அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணத்தில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்