ரயிலில் பட்டாக்கத்தியுடன் பயணித்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (15:23 IST)
சென்னையில் பட்டாக்கத்தியுடன் பயணித்ததாக 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் பேருந்துகளில் அடாவடி செயல்களில் ஈடுபடுவது, பேருந்துகளில் நடனம் ஆடி, சகப் பயணிகளுக்கு இடையூறு செய்வது, ரயில் மற்றும் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி செல்வது, பஸ்டே என்ற பெயரில் பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் நடனமாடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதையும் மீறி சிலர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில்  நடந்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை பட்டாபிராம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அச்சம் ஏற்படும் வகையில் பட்டாக்கத்தியுடன் பயணித்த 2  மாணவர்களை இன்று போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்தபடி சென்றதாக புகார் கூறப்பட்டது. அதன்படி, ரயில்வே பாதுகாப்பு துறை 2 கல்லூரி மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்