13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கும்பல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (08:42 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் நாடு முழுவதும் நடைபெறாமல் இருந்தது. கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை உள்பட எந்த வித செய்திகளும் ஊடகங்களில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டு மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில் தான் குற்றங்களும் நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது 4ஆம் கட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து தற்போது குற்றங்களும் ஆரம்பமாகியுள்ளன. இதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தர்வகோட்டை என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனை அடுத்து சிறுமியை நீண்ட நேரம் காணாமல் அவரது பெற்றோர்கள் குளத்தின் கரைக்கு சென்றபோது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்
 
உடனடியாக அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி சில மணி நேரத்தில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது 
 
இந்த நிலையில் தண்ணீர் எடுக்கச் சென்ற 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அவர் உயிரிழப்பதற்கும் காரணமான மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்