ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்-ன் தாய் நிறுவனத்தில் இருந்து 11000 ஊழியர்கள் பணி நீக்கம்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (17:21 IST)
.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் இருந்து 13%  ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது ஃபேஸ்புக். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது  ஃபேஸ்புக்.   உலகில் பல   நாடுகள் பகுதிகளில் இருந்து பல கோடி  மக்கள் நட்பாகிக் கொள்ளும் வசதி இந்த ஃபேஸ்புக்கில் உள்ளது.

இதில், உலக நாடுகளின் தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்களின் கருத்துகள் பதிவிடும் தளமாக இது பார்க்கப்படுகிறது.

ALSO READ: இனிமேல் ஃபேஸ்புக் குரூப்பிலும் ரீல்ஸ்...
 
சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய ட்லான் மஸ்க் டிவிட்டர் சி.இ.ஓ , நிதி அதிகாரி உள்ளிட்ட  பல ஆயிரம்  ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப்   நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை இன்று பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்