தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கை சட்டமன்றக் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1,538 டன் அரிசி வீணானது கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையடுத்து, வீணான அரிசியை கால்நடை தீவனமாகப் பயன்படுத்தலாம் என சட்டமன்றக் குழுவினர் பரிந்துரைத்தனர். மேலும், உரிய காலத்தில் மக்களுக்கு விநியோகம் செய்யாமல் அரிசியின் தரம் குறைய காரணமாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசுக்கு வலியுறுத்தினர்.