எக்கானமிக் டைம்ஸ் நடத்திய World Leaders Forum நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என பேசியுள்ளார்.
உலக பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் இந்தியா, உலக அளவில் ஜிடிபி மதிப்பில் நான்காவது இடத்திற்கு முன்னேறி ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளது. தற்போது அமெரிக்கா பல்வேறு காரணங்களை கூறி இந்தியாவிற்கு வரிவிதித்துள்ள போதிலும் இந்திய நிறுவனங்கள் தொடர் வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அதற்கேற்ப இந்திய அரசும், பிரதமர் மோடியும் உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி “கூடுதலாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில் விண்வெளி ஸ்டார்ட்அப்களை ஆதரிப்பதற்காக ₹1,000 கோடி துணிகர மூலதன நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரே ஒரு விண்வெளி ஸ்டார்ட்அப் மட்டுமே இருந்தது. இன்று, அந்த எண்ணிக்கை 300 க்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை சுற்றுப்பாதையில் வைத்திருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என பேசியுள்ளார்,.
மேலும் உள்நாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் வளர்ச்சி குறித்து பேசிய அவர் “வெறும் படிப்படியான மாற்றம் என்ற ரீதியில் இல்லாமல், ஒரு குவாண்டம் ஜம்ப் என்ற குறிக்கோளுடன் நாம் முன்னேறி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K