நேற்று தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் நீக்கப்பட்டது குறித்து, அவரது நீக்கத்திற்கு என்ன காரணம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் நீக்கப்படுவதாக இருந்தால், அதற்கு ஏதாவது குற்றச்சாட்டு அல்லது துறை ரீதியான ஒரு காரணம் இருக்க வேண்டும். ஆனால், அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
மேலும், பிரதமரை முதல்வர் சந்தித்தபோது, தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களை அனுப்பிவிட்டு, முதல்வர், கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் மட்டும் பிரதமருடன் பேசியது என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், "திமுகவை ஸ்டாலினால் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியையும் கொண்டு செல்ல முடியவில்லை என்பதால்தான் உதயநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவில் வாரிசு அரசியல் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.