பஞ்சாப் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் காணப்பட்டதாகவும், அதனை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தி, அதை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் ட்ரோன்கள் வழியாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள் கடந்த சில வருடங்களாக கடத்தப்பட்டு வரும் நிலையில், இந்திய ராணுவம் அதை அவ்வப்போது தடுத்து நிறுத்திக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள டார்ன் தரன் என்ற மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி, அதை கைப்பற்றியுள்ளனர்.
உளவு பார்ப்பதற்காக அந்த ட்ரோன் அனுப்பி வைக்கப்பட்டதா அல்லது, ஆயுதங்கள், போதைப் பொருள்கள் ஆகியவற்றை கடத்த பயன்படுத்தப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்யும் பணியில் பாதுகாப்பு படையினர் இருக்கின்றனர்.