தனது காதலி ஜீன்ஸ் அணிவது பிடிக்காததால் கழுத்தை நெறித்துக் கொன்ற காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த வினோத் என்பவரும், சந்தியா என்ற இளம்பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். சந்தியா ஜீன்ஸ் பேண்ட், டீசர் அணிவது வினோத்க்கு பிடிக்கவில்லை. மேலும் சந்தியா சில ஆண் நண்பர்களுடன் பழகுவதையும் வினோத் கண்டித்து வந்த நிலையில் அவ்வப்போது இருவருக்கும் வாக்குவாதம் எழுந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சாண்டா க்ரூஸ் ஓட்டலுக்கு சந்தியாவை அழைத்துச் சென்ற வினோத், அங்கு அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் வினோத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K