ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Webdunia
வியாழன், 31 மே 2018 (19:44 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நான்காம் எண் அன்பர்களே நீங்கள் சூழ்நிலைக் கேற்றவாறு செயல்படுவதில் வல்லவர். 


 
இந்த மாதம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக  எந்த பொறுப் பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.  மற்றவர்களுக்காக  வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும்  எதிர்பார்த்த லாபம் குறைய லாம். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு  உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்  தாமதம் உண்டாகும்.   குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை  செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து கூடும். மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்