ஜூன் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Webdunia
வியாழன், 31 மே 2018 (19:41 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருக்கும் கவலைகள் அகலும்.



திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். மற்றவர்கள் செய்கைகளால்  மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள்.  குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்