முந்திரி சிக்க‌ன் குருமா செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கோழிக்க‌றி - 1 கிலோ
வெங்காய‌ம் - 4 
த‌க்காளி - 4
ஏல‌க்காய் - 3
சோம்பு - 1 தேக்க‌ர‌ண்டி
க‌றிவேப்பிலை - கொஞ்ச‌ம்
கொத்தம‌ல்லித்த‌ழை - 1 கைப்பிடி
உப்பு - தேவையான‌ அளவு
மிளகாய்  தூள் - 2 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் - அரை டீஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் - 4
தேங்காய் துருவ‌ல் - 1 க‌ப்
முந்திரிப்ப‌ருப்பு - 50 கிராம்
எலுமிச்ச‌ம்ப‌ழ‌ம் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 2 ஸ்பூன்
ப‌ட்டை - 1
ல‌வ‌ங்க‌ம் - 2

செய்முறை:
 
கோழிக்க‌றியை சிறு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். தேங்காய் துருவ‌ல், மிள‌காய்,சோம்பு இவைகளை அரைத்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு  காய்ந்ததும் ப‌ட்டை, ல‌வ‌ங்க‌ம், ஏல‌க்காயை போடவும். 
 
இதனுடன் நறுக்கிய வெங்காய‌ம், ப‌ச்சை மிள‌காய், த‌க்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மிளகாய் தூள், தனியாத்தூள், ம‌ஞ்ச‌ள் பொடியையும் சேர்த்து வதக்கவும். 
 
பின்னர் கோழிக்க‌றியை கடாயில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும். இதனுடன் அரைத்த தேங்காய் க‌ல‌வை, முந்திரி விழுது, க‌றிவேப்பிலை சேர்த்து மீண்டும்  வதக்கவும்.
 
பிறகு த‌ண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க‌ வைக்கவும். இப்பொழுது குருமாவில்  எலுமிச்ச‌ம் ப‌ழ‌த்தை பிழிந்து விட்டு ம‌ல்லித்த‌ழையை ந‌றுக்கித் தூவி இறக்கினால் சுவையான முந்திரி சிக்கன் தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்