ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும். பின்னர் பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், மல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும். இப்போது சப்பாத்திக் கல்லை அடுப்பில் வைத்து தேய்த்த மாவை அதிகம் வாட்டாமல் நொடியில் வாட்டி எடுத்துக் கொள்ளவும். அப்போது தான் மொறுமொறுப்பாக சுருட்ட வரும். பின் அதனை சமோசா வடிவில் மடித்து அதில் சிறிது மசாலாவை வைத்து ஒட்டி விடவும். சமோசாக்களை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் சமோசா தயார்.