ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுமா சுரைக்காய்...?

Webdunia
சுரைக்காயில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து உடலுக்கு நீர்ச்சத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீரையும் வெளியேற்ற உதவுகிறது. உடலுக்கு நீர்ச்சத்தை வழங்கி உடலை குளுமை ஆக்குகிறது.

சுரைக்காய் மிகவும் ஆரோக்கியமான காய்கறி. இதில் அதிக அளவில் நீர்ச்சத்து உள்ளது. மேலும் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, கே மற்றும் கால்சியம் இதில் அதிக அளவில் உள்ளது.
 
இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்பதால் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களும் கூட இதை எடுத்துக்கொள்ளலாம்.
 
எந்த ஒரு உடல் சூடு தொடர்பான நோயையும் போக்கும் ஆற்றல் சுரைக்காய்க்கு உள்ளதாக சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பரிய மருத்துவங்கள்  தெரிவிக்கின்றன.
 
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு சுரைக்காய். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி பசியைக் கட்டுப்படுத்துகிறது.
 
சுரைக்காய் நீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. இதனால் அதிகப்படியான தண்ணீர் சிறுநீராக வெளியேற்றப்படும். சிறுநீர்ப்பாதை தொற்று நேரத்தில் தண்ணீருடன் இதை எடுத்துக்கொள்ளும்போது சிறுநீர்ப்பாதையில் உள்ள நோய்த் தொற்றை இது வெளியேற்றும்.
 
வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்னைக்கும் இது தீர்வாக இருக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து செரிமான செயல்பாட்டை  சரிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்