கருவாடை வெதுவதுப்பான நீரில் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கப்படாத சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து லேசாக வதக்கிக் ஆறவிட்டு வைத்துக் கொள்ளவேண்டும்.
இப்போது வதக்க்கிய பூண்டு, சின்ன வெங்காயத்தினை மிக்ஸியில் போட்டு, மிளகாய் தூள் சேர்த்து அரைக்க வேண்டும். அவ்விழுதினை புளித்தண்ணீர் சேர்க்கவும். பின் உப்பு சேர்க்கவும். பின் கலவையை கலக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது கடுகு, வெந்தயம், உளுந்து ஆகியவற்றினை கடாயில் நன்கு வதக்கி கிளறி விடவேண்டும். பூண்டு வெந்ததும் நறுக்கப்பட்ட சின்ன வெங்காயத்தினை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியைச் சேர்க்கவும்.
5 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விடவேண்டும். கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இப்போது புளிக்கரைசல் மற்றும் விழுது கலவையை ஊற்றவும். 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.
நன்கு கொதித்ததும், கருவாடுகளை போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை வேகவிடவும். இப்போது காரசாரமான சுவையான கருவாட்டு குழம்பு தயார்.