பொட்டுக்கடலை லேசாக வறுத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளையும் லேசாக வறுத்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். ஏலக்காயுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பொட்டுக்கடலை மாவு, மற்றும் முந்திரி, பாதாம், சர்க்கரைப் பொடி எல்லாவற்றையும் ஒரு அகன்ற தாம்பாளத்திலோ தட்டிலோ சேர்த்துக் கலக்கவும். இனிப்பு குறைவாக வேண்டியவர்கள் சர்க்கரைப் பொடியைக் குறைக்கவும்.
சூடான நெய்யுடன் நெய்யின் சூட்டில் சர்க்கரை இளகி உருண்டை பிடிக்க முடியும். சற்று சூடாகவே இருக்கும் போது லட்டைப் பிடிக்கவும். ஏலக்காய் மணத்துடன் முந்திரி பாதாம் ருசியுடன் சுவையான் மாலாடு தயார்.