சிக்கன் - அரை கிலோ
கரம் மலாசா - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 2
பட்டை - 2
கிராம்பு - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1 ஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை மூடி
சீரகம் - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
புளிக்காத தயிர் - 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 10
பெரிய வெங்காயம் - 4
தக்காளி - 4 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு மிளகு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், தனியா, வெந்தயம், துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து இளஞ்சிவப்பாக மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
பின்னர் வறுத்து எடுத்த பொருள்கள் அனைத்தும் நன்கு ஆறியதும் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளி, கொத்தமல்லி, வெங்காயம் ஆகிய அனைத்தையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை அதில் போட்டு நன்கு வதக்கி, பின்னர் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நன்கு வதங்கியவுடன் அதில் கரம் மசாலா கிளறவும்.
பின்னர் அதில் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, தயிர் ஆகிய அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். பின்னர் அதில் சிக்கனை சேர்த்து மசாலாவுடன் நன்கு பிரட்டி விடவும்.
ஒரு கொதி வந்ததும் மூடி போட்டு சுமார் இருபது நிமிடம் சிம்மில் வேகவிடவும். சிக்கன் வெந்து எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்திற்கு வந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் தயார்.