எளிதான முறையில் சுவையான மீன் தொக்கு செய்வது எப்படி...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
மீன் துண்டுகள் - 10 (முள்ளில்லாத மீன்)
தக்காளி - 4
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 7
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
ஜீரகத்தூள் -  1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1  ஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
தயிர் - 1 கப்
கரம் மசாலா - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
மீனை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
பிறகு மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். 
 
பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளற விடவும். மசாலா மீனுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி பரிமாறினால் சுவையான  மீன் தொக்கு தயார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்