செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து எலும்பிலுள்ள கறியை இயன்ற வரை தனியாக எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எலும்பை அம்மி அல்லது உரலில் வைத்து தட்டி எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் பூண்டை நறுக்கிக் கொள்ளவும். ப்ரெட்டை சிறிய துண்டுகளாக்கி வைக்கவும்.
வறுக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் வாசம் வரும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எலும்புடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, அரைத்த விழுது, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், உப்பு மற்றும் 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். வெந்ததும் சூப்பைத் தனியாக வடிகட்டி வைக்கவும்.
கடாயில் பட்டர் போட்டு உருகியதும், ப்ரெட் துண்டுகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிறிதளவு உப்பு (சிக்கன் வதங்க), மீதமுள்ள மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேக வைக்கவும்.