ரோட்டுக்கடை சுவையில் கறி பக்கோடா செய்வது எப்படி!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (08:25 IST)
ரோட்டுக்கடை சுவையில் கறி பக்கோடா செய்வது எப்படி!
 
செய்ய தேவையான பொருட்கள்: 
 
மட்டன்  - அரை கிலோ
 
இஞ்சி  - ஒரு அங்குலம் 
 
கொத்தமல்லி - இரண்டு டீஸ்பூன் 
 
பிச்சை மிளகாய் 10 
 
சின்ன வெங்காயம்  - 30 
 
கடலை மாவு - 100 கிராம் 
 
சீரகத்தூள் - ஒரு டீஸ் ஸ்பூன் 
 
எண்ணெய் - 250 கிராம் 
 
உப்பு - தேவையானவை 
 
செய்முறை: 
 
முதலில் துண்டு துண்டாக வெட்டிய கறியை சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். 
 
இந்த கலவையுடன் கொத்தமல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்துக்கொள்ளவும். கடலை மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். 
 
வேகவைத்த கறித்துண்டுகளை இந்த மாவில் போட்டு புரட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணையை ஊற்றி  காய்ந்ததும் கறி துண்டுகளை ஒரு தடவைக்கு 5.6 வீதம் போட்டு பொரித்தெடுக்கவும். இப்பொது ரோட்டு கடை ஸ்டைலில் சுவையான கறி பக்கோடா ரெடி. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்